சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும்: அமைச்சர் உறுதி

சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும் என அந்நாட்டு அமைச்சர் ஈஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும்: அமைச்சர் உறுதி

சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும்: அமைச்சர் உறுதி

சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும் என அந்நாட்டு அமைச்சர் ஈஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சிங்கப்பூர் நாடு உருவாக்கியதில் தமிழர்களின் பங்கு அதிகம். எனவே அந்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் இருந்து வருகிறது. மேலும் அந்நாட்டு பணமான டாலரில், ஆங்கிலம், சீனா, மலாய் மொழிகளைத் தொடர்ந்து தமிழும் இடம்பெற்றுள்ளது. தற்போது வரை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. அதேபோன்று அந்நாட்டு பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் தமிழ், அலுவல் மொழியாக தொடரும் என்ற உறுதியை அந்நாட்டு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  ஈஸ்வரன் அளித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும் என்பதில் சிங்கப்பூர் அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்கும் விதத்தில் அவர்கள் தமிழில் பேச வேண்டும். தமிழின் வளர்ச்சி தமிழர்கள் கையில் தான் இது உள்ளது. சிங்கப்பூரில் நடத்தப்படும் தமிழ் திருவிழா அதனை மேம்படுத்த உதவும்" என்று பேசியுள்ளார்.

சிங்கப்பூரில் இன்று பல வெளிநாட்டினர் வந்து வசிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக வங்க தேசத்தவர்கள், வட இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்கள், இந்தி, வங்க மொழியை சிங்கப்பூரின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகின்றனர். அதேபோல், பல மொழியினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் ஈஸ்வரன் பேச்சு தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP