தற்கொலைப் படைத் தாக்குதல்: 6 பேர் பலி

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த 30 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 | 

தற்கொலைப் படைத் தாக்குதல்: 6 பேர் பலி

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

ஹோட்டலின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், மூன்று கார்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததிலும், ஹோட்டல் அறைகளுக்குள் தீவிரவாதிகள் திட்டமிட்டு நுழைந்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதலிலும் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த 30 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோமாலியாவிலிருந்து செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு இந்த  தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP