பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜூவா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 | 

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜூவா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜூவா நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  அவரது ராஜினாமாவை இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்க் உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி நசிருல் முல்க் இடைக்கால பிரதமராக பதவி ஏற்று, நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த சர்தாஜ் அஜிஸ் மாற்றப்பட்டு, அவரது இடத்துக்கு நாசர் ஜன்ஜூவா 2015–ம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

இவர் மேஜர் ஜெனரல் மெகமூது துரானிக்கு பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வந்ந 2வது ராணுவ உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அரசவை அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.

இப்போது அவர் திடீரென பதவி விலகியதன் காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்க்குடன் ஏற்பட்ட மோதல் போக்கால்தான் நாசர் ஜன்ஜூவா பதவி விலகி உள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் கூறுகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP