சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு

25 ஆண்டுகாலம் பதவியில் இருந்த சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர்.
 | 

சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு

25 ஆண்டுகாலம் பதவியில் இருந்த சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர். உள்நாட்டுப்போரின் போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது ஆட்சிக்கு எதிராக பெருவாரியான மக்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அவர் பதவி விலகக்கோரி அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன.

சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்நாட்டின் ராணுவ மந்திரி அவாத் இப்ன் அவுப், கடந்த 11-ந்தேதி ராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.

ஆட்சியை கவிழ்த்ததோடு ராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் அவாத் இப்ன் அவுப், ராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார்.

ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட உமர் அல் பஷீர் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. இந்நிலையில், நேற்று அவர் கர்ட்டோம் நகரில் உள்ள கோபெர் சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP