தாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்!

தாய்லாந்து : குகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்களில் மொத்தம் 8 பேர் மீட்பு.
 | 

தாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்!

குகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் அனைவரும் பத்திரிரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சிறிய நீர்மூழ்கி கப்பலை தயாரித்துக் கொடுத்த கார் நிறுவனத்துக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

தாய்லாந்தில், குகையில் மாட்டிக் கொண்ட கால்பந்தாட்ட வீரர்களை மீட்பதற்கான பணி கடந்த ஞாயிறுக்கிழமை தொடங்கியது. அன்று 4 பேர் மீட்கப்பட்டனர். நேற்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டனர்.  இதனை தாய்லாந்து கப்பல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மீட்கப் பட்ட சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்கிறார்கள். வெளியே வந்த அவர்கள் சாக்லெட் கேட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

8 பேர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 25 வயது பயிற்சியாளர், நான்கு சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் குகைக்குள் இருந்தார்கள். இன்று அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இன்று 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்!

மீட்புப் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதலில், மீட்புப் பணியை முடிக்க மாதக்கணக்கில் ஆகும் என்ற செய்திகள் வெளியாகின. இதனால், உலகம் முழுக்க இருந்து உதவிகள் குவிந்தன. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் என்பவர் இதற்காகவே சிறிய நீர் மூழ்கி கப்பலை (சப்-மெரைன்), வடிவமைத்துள்ளார். இதை அவர் தாய்லாந்து மீட்புக் குழுவினருக்கு அளித்திருக்கிறார்.

இந்த சிறிய சப்-மெரைன்கள் எடை குறைவாக இருப்பதால், குறுகிய இடங்களிலும் எளிதாக எடுத்து செல்ல முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பிரபல டெஸ்லா கார் நிறுவனத்தின் துணை நிறுவனர் தான் இவர்.  இருப்பினும், சிறிய நீர்மூழ்கி கப்பல் உதவி இன்றியே அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். ஆனாலும், சிறுவர்களைக் காப்பாற்ற மிக வேகமாக நீர்மூழ்கி கப்பலை தயாரித்த எலானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் ஏதேனும் ஏற்பட்டால் இந்த மினி நீர் மூழ்கி கப்பல் பயன்படும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP