ஸ்டைலாக தம் அடிக்கும் உர்ராங்குட்டான்!

மிருகக் காட்சி சாலையில் உர்ராங்குட்டான் குரங்கு ஒன்று ஸ்டைலாக அமர்ந்து சிகெரெட் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
 | 

ஸ்டைலாக தம் அடிக்கும் உர்ராங்குட்டான்!

ஸ்டைலாக தம் அடிக்கும் உர்ராங்குட்டான்!மிருகக் காட்சி சாலையில் உர்ராங்குட்டான் குரங்கு ஒன்று ஸ்டைலாக அமர்ந்து சிகெரெட் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது அனைவரின் கவனத்தை ஈர்ந்த்தாலும், பலரது கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது.

ஸ்டைலாக தம் அடிக்கும் உர்ராங்குட்டான்!

இந்தோனோஷியாவில் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் மிருக காட்சி சாலையில் உர்ராங்குட்டான் குரங்குகள் உள்ளனர். இதனை காண்பதற்காகவே இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வருவது உண்டு. கடந்த ஞாயிற்றுக்கிழமை உர்ராங்குட்டானை பார்க்க வந்த பார்வையாளர் ஒருவர் தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அதன் அருகில் வீசியுள்ளார். சிகரெட்டை பார்த்த குரங்கு, அதை எடுத்து வாயில் வைத்து ஊத தொடங்கியது. உர்ராங்குட்டான் தம் அடிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாக பரவி வருகிறது.


இதுகுறித்து மிருகக்காட்சி சாலையின் அதிகாரி கூறுகையில், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடக்காதபடி பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP