ஜப்பானில் அசூர புயல் : பலி எண்ணிக்கை உயர்வு

ஜப்பானில் அசூர புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
 | 

ஜப்பானில் அசூர புயல் : பலி எண்ணிக்கை உயர்வு

ஜப்பானில் அசூர புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் இஷிகாவாவில் திடீரென புயல் வீசியது.இந்த புயல்  மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தது.

இதை தொடர்ந்து ஒசாகா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் ஆட்டம் கண்டது. பின்னர் அந்த கப்பல் சென்று கரைப்பகுதியை தாக்கியதில் பாலம் ஒன்று சேதம் அடைந்தது. பல மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து கரைப்பகுதியில் புகுந்தது. புயலை தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு கான்சாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP