இலங்கை தேர்தல்: ராஜபக்சே அமோக வெற்றி

இலங்கை தேர்தல்: ராஜபக்சே அமோக வெற்றி
 | 

இலங்கை தேர்தல்: ராஜபக்சே அமோக வெற்றி


இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. இதில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி அமோக வெற்றிப்  பெற்றுள்ளதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதனால் இவர் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு   ஜனவரி மாதம் 8-ந் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக ராஜபக்சே கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி 51 இடங்களிலும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வெற்றியை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்று மீண்டும் அவர் அதிபர் ஆவார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கணித்து வருகின்றன.newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP