விடுதலைப் புலிகள் ஆயுத கப்பலை மூழ்கடித்தது இலங்கை

10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுத கப்பலை இலங்கை கடற்படை நடுக்கடலில் மூழ்கடித்தது.
 | 

விடுதலைப் புலிகள் ஆயுத கப்பலை மூழ்கடித்தது இலங்கை

விடுதலைப் புலிகள் ஆயுத கப்பலை மூழ்கடித்தது இலங்கை10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுத கப்பலை இலங்கை கடற்படை நடுக்கடலில் மூழ்கடித்தது. 

இலங்கையில் தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் 1984ம் ஆண்டுக் கடல் புலிகள் அமைப்பை உருவாக்கினர். ஓர் அரசுக்கு இணையாகக் கப்பல் போக்குவரத்தை நடத்தியது விடுதலைப் புலிகள் அமைப்பு. தங்கள் கப்பல்கள் மூலம், தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்துகொண்டனர். இதனால், இலங்கைக்கு விடுதலைப் புலிகள் மிப்பெரிய சவாலாக இருந்தனர். 

விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கிக்கொடுத்த கே.பி எனப்படும் கே.பத்மநாதன் தாய்லாந்தில் 2007-ம் ஆண்டுக் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டுவர அவர் பயன்படுத்தி ஆயுத கப்பலும் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பலை இலங்கை அரசு பயன்படுத்திவந்தது. இந்தக் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக இதை ஏலத்தில் விட இலங்கை அரசு திட்டமிட்டது. ஆனால், யாரும் வாங்கவில்லை. இதனால், கப்பலைப் பராமரிக்க முடியாத சூழலில் நடுக்கடலில் மூழ்கடிக்கத் திட்டமிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி இந்தக் கப்பலை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், கப்பலை வெடிவைத்து மூழ்கடித்தனர். இந்த கப்பலுடன், முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய புல்லட் ப்ரூஃப் வாகனங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சில வாகனங்களும் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டன என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP