"தயவு செய்து பதவி விலகுங்கள்" அதிபரிடம் கெஞ்சும் தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி

"தயவு செய்து பதவி விலகுங்கள்" அதிபரிடம் கெஞ்சும் தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி
 | 

"தயவு செய்து பதவி விலகுங்கள்" அதிபரிடம் கெஞ்சும் தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி


ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, இன்னும் 3 முதல் 6 மாதங்களில் பதவி விலக உள்ளதாக, கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜூமாவின் மீது மக்கள் அபிமானம் மிக மோசமாக உள்ளது. அதனால், அவர் தலைமை வகித்து வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) கட்சி, அவரை நீக்க முடிவெடுத்தது. ஆனால், கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மறுத்துவிட்டார். கடந்த டிசம்பர் மாதம் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 

தொடர்ந்து பல மாதங்களாக பதவியில் நீடித்து வரும் அவரால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக கூறி, மீண்டும் நேற்று அவரை ஏ.என்.சி மூத்த தலைவர்கள் சந்தித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில், 3 முதல் 6 மாதங்களில் அவர் பதவி விலகுவார் என ஏ.என்.சி தலைவர்கள் கூறினார்கள். ஆனால், தற்போது அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஏ.என்.சி கட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

2009ம் ஆண்டு முதல் ஜேக்கப் ஜூமா பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP