நீண்ட போராட்டத்துக்கு பின் தென் ஆப்பிரிக்க அதிபர் ராஜினாமா

நீண்ட போராட்டத்துக்கு பின் ராஜினாமா செய்தார் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா
 | 

நீண்ட போராட்டத்துக்கு பின் தென் ஆப்பிரிக்க அதிபர் ராஜினாமா


அனைத்து தரப்பு எதிர்ப்பையும் மீறி, பல மாதங்களாக விடாப்பிடியாக பதவியில் நீடித்து வந்த தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக சர்ச்சை தொடர்ந்து வந்தது. தனது ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) கட்சியினரே பலமுறை கோரிக்கை வைத்தும் அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனாலும், அதிபர் பதவியை அவர் விடவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், 3 முதல் 6 மாதங்களில் பதவி விலக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் கட்சியின் பெயர் கெட்டுப்போவதாக கூறி அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இல்லையெனில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க உள்ளதாக எச்சரித்த பின், பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தொலைக்காட்சியில் நேரலையில் மக்களிடம் பேசிய அவர், எந்த தவறும் செய்யாத தன் மீது எல்லோரும் வீண் பழி போடுவதாக குற்றம் சாட்டினார். பின்னர், தனது ஏ.என்.சி கட்சியின் உள்ளே வன்முறை சூழ்ந்துள்ளதாகவும், தன்னால் யாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்  கூடாது என்பதற்காகவே உடனடியாக பதவி விலகுவதாக தெரிவித்தார். 

துணை அதிபர் சிரில் ராமபோஸா புதிய அதிபராக பதவியேற்பார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP