தென் ஆப்பிரிக்கா: கார் திருட்டின் போது 9 வயது இந்திய சிறுமி பலி

தென் ஆப்ரிக்காவில், இந்திய பூர்வீகம் கொண்டவர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த ஒரு கார் திருட்டு சம்பவத்தில், 9 வயதான இந்திய சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டார்.
 | 

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள சாட்ஸ்வர்த் பகுதியை சேர்ந்தவர் சைலேந்திரா. அவரும் அவரது மகள் சாதியாவும், உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் சைலேந்திராவை வெளியே தள்ளிவிட்டு, அவரது காரை திருடிச் சென்றனர். அப்போது, காரினுள், சைலேந்திராவின் மகள் சிக்கிக் கொண்டாள்.

காரை சைலேந்திரா துரத்திச் செல்ல, அவருக்கும், திருடர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அப்போது, கார் விபத்துக்குள்ளனது. காரில் இருந்த சிறுமி சாதியா, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிரிழந்தார். திருடர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட, மற்றொருவர் விபத்தில் ஏற்பட்ட காயத்தில் உயிரிழந்தார்.

இந்திய பூர்வீகம் கொண்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் காவல்நிலையத்தை சூழ்ந்தனர். தொடர்ந்து இதுபோன்ற கார் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் போனதால் தான் சிறுமி உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். 

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர், "துப்பாக்கி குண்டுகள் தாக்கியதால் சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் தந்தையும் துப்பாக்கியால் திருடர்களை நோக்கி சுட்டதால், சிறுமி மீது பாய்ந்த குண்டு யாரிடம் இருந்து வந்தது என சரியாக தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தப்பித்த திருடனை தேடி வருகிறோம்" என கூறினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP