பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றியது சோமாலிலாந்து!

பாலியல் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சமாக 30 வருடங்கள் தண்டனை வழங்கப்படுகின்றது.
 | 

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றியது சோமாலிலாந்து!


பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முதல் முறையாக சோமாலிலாந்தில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு சோமாலியா நாட்டிலிருந்து பிரிந்து, தன்னை சுதந்திர தனி நாடு என்று சோமாலிலாந்து பிரகடனம் செய்துகொண்டது. ஆனால் சர்வேதேச நாடுகளால் அந்நாடு தனிநாடாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. 

சோமாலியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் எதுவும் இல்லாத நிலையில், பெண்கள் சமூகத்தில் கவுரவமாக வாழவும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கவும் சோமாலிலாந்து பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிகக்ப்பட உள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்ற அவைத்தலைவர் பாஷே மொகமத் ஃபாரா, "அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்க இந்தப் புதிய சட்டம் உதவும். தற்போது கூட்டுப் பாலியல் வல்லுறவுகளும் நடக்கின்றன. பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம்" என்றார். குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியதன் பின்னர் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP