நடுக்கடலில் இந்தியர்கள் 20 பேருடன் கப்பல் கடத்தல்..

20 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்..
 | 

நடுக்கடலில் இந்தியர்கள் 20 பேருடன் கப்பல் கடத்தல்..

மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி சென்ற கப்பல் இந்தியர்கள் 20 பேருடன் கடத்தப்பட்டுள்ளது.
 
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நைஜீரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் ((MT Duke)) என்ற சரக்குக் கப்பல் கடந்த 15ம் தேதி காணாமல் போனது. பின்னர் அந்த கப்பலை கொள்ளையர்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதில் இருந்தவர்களில் 20 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் கடத்தப்பட்டதை நைஜீரிய அரசு உறுதி செய்துள்ளது.

நடுக்கடலில் இந்தியர்கள் 20 பேருடன் கப்பல் கடத்தல்..

இந்நிலையில் இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது கவலையைத் தெரிவித்துள்ளதார். கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கப்பலை கடத்தியது எந்த குழு, கப்பலை எங்கே கொண்டுச் சென்றனர் என தேடியும் வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஹாங்காங்கில் இருந்து சென்ற கப்பல் ஒன்று கடத்தப்பட்டதும், அதில் சிக்கிய 18 இந்திய மாலுமிகள் இன்னமும் மீட்கப்படாத நிலையில் மீண்டும் நடந்துள்ள கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP