சியோல்: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்

சியோல் டவுண்டவுன் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் 40 முதல் 60 வயதுள்ளவர்கள் ஆவர்.
 | 

சியோல்: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்

சியோல் டவுண்டவுன் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சியோலில் உள்ள டவுண்டவுன் நகரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்நிலையில், இந்த விடுதியின் 3ஆம் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இதில் சிக்கிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணியினர் இவர்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது.  உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் 40 முதல் 60 வயதுள்ளவர்கள் ஆவர்.  

இந்த கட்டடத்தில் அவசர அழைப்பு மணி, அவசர வழி இருந்த போதிலும், தீயை அணைக்கும் கருவி இல்லாததால், தீயை உடனடியா அணைக்க முடியவில்லை என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP