Logo

அர்ஜென்டினாவில் மதசார்பற்ற பிரார்த்தனை: பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு 

அர்ஜென்டினாவில் 'அமைதி, உணவு, வேலை' இவை யாவும் கிடைத்திட வேண்டி அங்குள்ள புனித பசிலிக்கா தேவாலயம் அருகே பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு பேரணியை நடத்தியது காண்போரை நெகிழவைப்பதாக இருந்துள்ளது.
 | 

அர்ஜென்டினாவில் மதசார்பற்ற பிரார்த்தனை: பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு 

அர்ஜென்டினாவில் 'அமைதி, உணவு, வேலை' இவை யாவும் கிடைத்திட வேண்டி அங்குள்ள புனித பசிலிக்கா தேவாலயம் அருகே பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு பேரணியாக சென்று பிரார்த்தனை நடத்தியது காண்போரை நெகிழவைப்பதாக உள்ளது. 

அர்ஜென்டினாவின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. வேலையின்மை மற்றும் வறுமை தலை விரித்தாடுகிறது. இந்த நிலையில் அர்ஜென்டினாவின் லுசான் நகரில் உள்ள புனித கத்தோலிக்க மெர்சிடிஸ்-லுஜான் அகஸ்டின் ரேட்ரிசானி பிஷப் தலைமையில் இந்தப் பேரணி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.  'அமைதி, உணவு, வேலை' ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியில் பல்வேறு கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், யூனியன் தலைவர்கள், பிறமதத்தினர் என பாரபட்சமின்றி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  பின்பு இவர்கள் அனைவரும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அர்ஜென்டினாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு கரன்சியான பெசோ அதன் மதிப்பின் பாதி அளவை இந்த ஆண்டில் மட்டும் இழந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் 40 சதவீதமாக உள்ளது. இதனால் ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 50 பில்லியன் டாலர் தொகையை அர்ஜென்டினா கடனாக பெற்றுள்ளது. 

ஐ.எம்.ஃஎப்பில் கடன் வாங்குவது என்பது அர்ஜென்டினாவை திவாலாக்கும் நிலைக்கு இட்டுச் சென்று விடும் என்று அறிவக்கும் முகமாக அந்த நாட்டு  அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தப்பட்ட பின்னரும் கடன் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP