பூமியின் எல்லையான பனிச்சுவரை நோக்கி கடற்பயணம்

பூமி தட்டையானது என நம்பும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக நடைபெற்ற வருடாந்திர கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர், பூமியின் எல்லையை தேடி கடற்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.
 | 

பூமியின் எல்லையான பனிச்சுவரை நோக்கி கடற்பயணம்

பூமி தட்டையானது என நம்பும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக நடைபெற்ற வருடாந்திர கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர், பூமியின் எல்லையை தேடி கடற்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். பெருங்கடல்களை தாங்கிக் கொண்டிருக்கும் பனிக்கட்டி சுவரை அவர்கள் தேடவுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் இந்த பயணம் நடைபெறும் என பிளாட் எர்த் சர்வதேச மாநாடு சமீபத்தில் அதன் வலைத்தளத்தில் அறிவித்தது. இதன் இலக்கு என்ன? தட்டையான இந்த பூமியானது அதன் விளிம்பில் ஒரு பனிக்கட்டி சுவரால் சூழப்பட்டுள்ளது என வலியுறுத்தும் பூமி தட்டையானது என்போரின் வாதத்தை நிரூபிக்கவே இந்த சோதனை பயணம்.

இந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், தேதிகள் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என எப்இஐசி கூறியுள்ளது. மேலும் இந்த கடற்பயணத்தை மிகப்பெரிய மற்றும் இதுவரை இல்லாத தைரியமான சாகச பயணம் என அழைக்கின்றனர்.

இருப்பினும், உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்புகள் (ஜிபிஎஸ்) மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பங்கள் போன்றவை எப்போதும் போல இயங்கி வருகின்றன என்பதை இங்கே குறிப்பிடுவது மிக முக்கியமானது. ஏனெனில் பூமி கோள வடிவுடையது.

பூமி தட்டையானது என்ற வாதத்தை முன்வைக்கும் விசுவாசிகள், வளைந்த அடிவானத்தை காட்டும் படங்கள் போலி எனவும் மற்றும் விண்வெளியில் இருந்து பூமியை எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பூமி தட்டையானது என்பதை மறைக்க நாசா மற்றும் பிற விண்வெளி அமைப்புகள் பரப்பும் வதந்திகளின் ஒரு பகுதியாகும் என்று வாதிடுகின்றனர். 

உலகின் பழமையான அதிகாரப்பூர்வ பூமி தட்டையானது என்போர் சங்கம் 1800களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்கிறது ப்ளாட் எர்த் சொசைட்டி அமைப்பின் இணையதளம். இருப்பினும் பண்டைய கிரேக்கர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே பூமி கோள வடிவத்தில் இருக்கும் எனவும், மேலும் இந்த கிரகத்தின் மீது உள்ள எல்லாவற்றையும் விண்வெளியில் பறக்க விடாமல் இருக்க இந்த கோள கிரகத்தின் ஈர்ப்புவிசை இருக்கிறது என்பதையும் நிரூபித்தனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP