அமேசான் சி.இ.ஓ.,வின் அந்தரங்க புகைப்படங்களை கசியவிட்ட சவூதி

அமேசான் நிறுவன சிஇஓவின் சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கசிந்தது தொடர்பான விசாரணையில், சவூதியைச் சேர்ந்தவர்களால் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்தே தகவல் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

அமேசான் சி.இ.ஓ.,வின் அந்தரங்க புகைப்படங்களை கசியவிட்ட சவூதி

அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெசோசின் சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சவூதியைச் சேர்ந்தவர்களால் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு,  வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜெஃப் பெசோசின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான கெவின் டி பெக்கெர் உள்ளிட்ட வல்லுநர் குழு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

அதே நேரம் சவூதி அரசின் எந்த பிரிவு இதனை ஹேக் செய்து கசியவிட்டது என்கிற முழு விபரத்தை அந்த விசாரணைக்குழுவினர் தெளிவுபட விளக்கவில்லை.

ஜெஃப் பெசோசின்  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவூதி இளவரசருக்கு எதிராக செய்திகள் வெளியிடப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP