பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்ற சவுதி: சிறையில் உள்ள 850 இந்தியர்கள் விடுதலை!

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சவுதி அரேபிய நாட்டில் சிறையில் உள்ள 850 இந்தியர்களை விடுதலை செய்ய அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
 | 

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்ற சவுதி: சிறையில் உள்ள 850 இந்தியர்கள் விடுதலை!

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, சவுதி அரேபிய நாட்டில் சிறையில் உள்ள 850 இந்தியர்களை விடுதலை செய்ய அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். 

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகம்மது பின் சல்மானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். தொடர்ந்து, நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தினார்.

பின்னர், பிரதமர் மோடியுடனான சவுதி இளவரசர் சந்திப்பில், இந்தியா - சவுதி நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

அப்போது, சவுதி சிறைகளில் உள்ள இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இளவரசர் முகம்மது பின் சல்மானிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற இளவரசர், சவுதி நாட்டின் சிறைகளில் உள்ள 850 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்திய ஹஜ் பயணிகளுக்கான எண்ணிக்கையை மேலும் 25,000 அதிகரித்தும் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

 

முன்னதாக, புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய இளவரசர், 'தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுடன் துணையாக நிற்போம்' என்று அறிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP