ரஷ்யா ஷாப்பிங் மால் தீ விபத்து: பலி 64ஆக உயர்வு

ரஷ்யாவில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
 | 

ரஷ்யா ஷாப்பிங் மால் தீ விபத்து: பலி 64ஆக உயர்வு

ரஷ்யா ஷாப்பிங் மால் தீ விபத்து: பலி 64ஆக உயர்வு

ரஷ்யாவில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ரஷ்யாவின் கெமேரோவோ நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பொதுமக்கள் 37 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. 40 குழந்தைகள் உட்பட 69 பேர் காணாமல் போனதாக மீட்புப் பணி அதிகாரிகள் காலை தெரிவித்தனர். 

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளதாக ரஷ்யா அவசர சேவைகள் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

திடீரென மாலின் மேல் தளத்தில் தீ பற்றி, அது மற்ற தளங்களுக்கும் பரவியது. குழந்தைகளுக்கான பொதுபோக்கு அம்சங்கள், தியேட்டர்கள், விளையாட்டு பகுதிகள் கொண்ட கட்டிடம் என்பதால், தீயில் பல குழந்தைகள் சிக்கினார்கள். ஞாயிற்று கிழமை என்பதால், ஷாப்பிங் மால் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP