சிரியா நாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா மறுப்பு!

சிரியாவில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்த கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து போர் நடக்கும் அபாயம் நிலவுகிறது.
 | 

ரஷ்ய படைகளின் உதவியுடன் சிரிய அரசுப்படைகள், கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ள கவுட்டா பகுதியை கைப்பற்றும் பொருட்டு வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 6வது நாளாக நடந்து வரும் இந்த தாக்குதலில் 400 க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனமும் தெரிவித்து வருகிறது. இவர்கள் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 90 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய தீர்மானத்தை கொண்டு வரும் பொருட்டு குவைத், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவை கோரின. அதற்கு ஐ.நாவும் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இந்த தீர்மானத்தில் உடன்பாடில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP