ரூ.50 காேடியில் தடுப்பு சுவர் திட்டம்- பிரதமர் அடிக்கல் நாட்டினார்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 50 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் .
 | 

அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி இறந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் அமைந்து உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அந்தமானில் இன்னும் கூட்டுக் குடும்பமுறை கடைபிடிக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என உறுதி அளித்தார். இங்கு வாழும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பிள்ளைகளின் கல்வி, முதியவர்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் விவசாய மக்களின் தேவைகளை இந்த அரசு உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP