அந்தமானில் உள்ள தீவுகளின் பெயர் மாற்றம்

அந்தமான் நிகோபாரில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது. நேதாஜி 1943ம் ஆண்டு ஆரம்பித்த ஆசாத் இந்த் இயக்கத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு அந்தமானில் உள்ள ரோஸ் தீவுகளின் பெயர் சுபாஷ் சந்திரபோஸ் தீவு என பெயர் மாற்றப்படுகிறது
 | 

அந்தமானில் உள்ள தீவுகளின் பெயர் மாற்றம்

அந்தமான் நிகோபாரில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. 

நேதாஜி 1943ம் ஆண்டு ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் இயக்கத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு அந்தமானில் உள்ள ரோஸ் தீவுகளின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனவும், நெயில் தீவு பெயர் ஷாகீத் த்வீப் எனவும் ஹேவ்லாக் தீவு பெயர், சுவராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட உள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் செய்து முடித்துள்ளது. நேதாஜி ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் அமைப்பின் 75வது ஆண்டை முன்னிட்டு வருகிற 30ம் தேதி அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார்.

அப்போது, தீவுகளின் பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP