அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- விளாடிமீர் புதின்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.
 | 

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- விளாடிமீர் புதின்


அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா- ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி- 20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார். 

இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது என புதின் குறிப்பிட்டுள்ளார். 

ரஷியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணம் என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP