14 வயது சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுல்!

துபாய் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு இந்திய வம்சாவளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது 14 வயது சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ராகுல் திக்குமுக்காடினார்.
 | 

14 வயது சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுல்!

துபாய் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு இந்திய வம்சாவளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது 14 வயது சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திக்குமுக்காடினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் மாநாடு மற்றும் துபாய் நாட்டின் தலைவர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இந்திய வம்சாவளி மாணவர்கள் மத்தியிலும் அவர் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது 14 வயது சிறுமி ஒருவர் கேட்ட கேள்வியால் ராகுல் திக்குமுக்காடிப்போனார். 

"அனைவருக்கும் வணக்கம்" என்று தனது பேச்சை ஆரம்பித்த சிறுமி, ராகுல் காந்தியிடம் "இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள், குஜராத் தேர்தலின்போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்றது ஏன்?. அதுவே காஷ்மீராக இருந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள்!" என்று கேட்க அரங்கில் நிசப்தம் ஏற்பட்டது.

இந்த கேள்வியை ராகுல்காந்தி எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ந்து போய்விட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பதில் அளித்த அவர், "அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும், விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம்" என்றார்.

தொடர்ந்து அந்த சிறுமி, "இந்தியாவில் கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்கள்?" என்று கேட்க, அந்த சிறுமியை பார்த்து சிரித்தபடி ராகுல் மவுனமானார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP