ரபேல் விமானங்களை இயக்க பாக்..விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை -பிரான்ஸ் விளக்கம்

"பாகிஸ்தான் வீரர்களுக்கு, தனிப்பட்ட முறையில் ரபேல் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கவில்லை" என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
 | 

பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானிகளுக்கு, ரபேல் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. 

இந்தத் தகவல் இந்திய அளவில் அதிர்ச்சி கிளப்பிய நிலையில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் ஸீக்லர், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "கத்தார் விமானப்படைக்காக 2017, நவம்பரில் ரபேல் விமான பயிற்சி கொடுக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல நாடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர்.

அதேபோல பாகிஸ்தான் ராணுவமும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவத் தளவாடங்களை வாங்கி பயன்படுத்தியுள்ளது. அப்படி கத்தார் நாட்டில் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளாக இருந்த பாகிஸ்தான் விமானப்படையினருக்கு ரபேல் போர் விமான பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை என்னால் உறுதிபட தெரிவிக்க முடியும்" என்று தொிவித்துள்ளாா். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP