பயணிகள் விமானத்தை நடுவானில் சுட்டுத் தள்ள உத்தரவிட்ட புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சில ஆண்டுகளுக்கு முன்னர், துருக்கி சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தில் வெடுகுண்டு இருப்பதாக தவறான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அதை சுட்டுத் தள்ள உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது.
 | 

பயணிகள் விமானத்தை நடுவானில் சுட்டுத் தள்ள உத்தரவிட்ட புடின்

பயணிகள் விமானத்தை நடுவானில் சுட்டுத் தள்ள உத்தரவிட்ட புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சில ஆண்டுகளுக்கு முன்னர், துருக்கி சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தவறான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அதை சுட்டுத் தள்ள உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது.

புடின் பற்றிய ஒரு ஆவணப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 2014ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியை சேர்ந்த ஒரு விமானம், உக்ரைன் நாட்டில் இருந்து ரஷ்ய வான்வழியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 110 பயணிகளை கொண்ட அந்த விமானத்தை ரஷ்யாவில் தரையிறக்க வேண்டும் அல்லது தன் மீதுள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடுவேன் என தீவிரவாதி மிரட்டுவதாக தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, ரஷ்ய அதிகாரிகள் அதை புடினிடம் கூறியுள்ளனர். அப்போது அவர், ஒலிம்பிக்ஸ் நடக்கும் சமயத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என புடின் ஆலோசனை கேட்டபோது, அதிகாரிகள் விமானத்தை நடுவானில் சுட்டுத் தள்ளலாம் என கூறியுள்ளனர். புடினும் பயணிகள் விமானத்தை சுட்டுத் தள்ள உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவு கொடுத்து சில நிமிடங்களில், அந்த விமானத்தை மிரட்டி வந்தது தீவிரவாதி அல்ல, குடிபோதையில் இருந்த ஒரு பயணி தான் என தெரிய வந்துள்ளது. 

சரியான தகவல்கள் தெரியாத போது, இவ்வாறு பயணிகள் விமானத்தை சுட்டுத் தள்ள ரஷ்ய அரசு உத்தரவிட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP