மகளை போல வேடமிட்டு தப்ப முயன்ற கைதி : வைரல் வீடியோ உள்ளே 

சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய கிளாவினா டா சில்வா. ஒவ்வொரு வாரமும் தன்னை சந்திக்க வரும் மகள் போன்று வேடமிட்டு, மகளை சிறையில் தனக்கு பதிலாக விட்டு விட்டு தப்பிக்க முடிவு செய்துள்ளார்.
 | 

மகளை போல வேடமிட்டு தப்ப முயன்ற கைதி : வைரல் வீடியோ உள்ளே 

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். காவல்துறையினரின்  பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் சிறையிலிருந்து தப்பிக்க  திட்டம் தீட்டிய   கிளாவினா டா சில்வா. ஒவ்வொரு வாரமும் தன்னை சந்திக்க வரும் மகளை போன்று வேடமிட்டு, மகளை சிறையில் தனக்கு பதிலாக விட்டு விட்டு தப்பிக்க முடிவு செய்துள்ளார். 

பின்னர் தனது செல்வாக்கை பயன்படுத்தி முகமூடி, தலைமுடி, உடை போன்றவற்றை தயார் செய்த அவர் வழக்கம் போல சனிக்கிழமையன்று  தன்னை பார்க்க வந்த மகளை சிறைக்குள் அனுப்பி விட்டு, வெளியில் செல்ல முயற்சி செய்துள்ளார். 

ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர். போதைப்பொருள் கடத்தி வந்த பெண் என கருதி சோதனை செய்துள்ளனர். சோதனையின் முடிவில், அது பெண்ணே இல்லை என்பதை  கண்டுபிடித்த காவல்துறையினர் குற்றவாளியின் மேக்கப்பை கலைக்கும் படி கூறியுள்ளனர்.  பின்னர் அந்த காட்சிகளை   வீடியோவில் பதிந்துள்ளனர் காவல்துறையினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP