நாட்டைவிட்டு தப்பியோடும் கடனாளிகளை பிடிக்க ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை!

வரி ஏய்ப்பு மற்றும் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க ஜி- 20 நாடுகள் உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம்- மோடி
 | 

நாட்டைவிட்டு தப்பியோடும் கடனாளிகளை பிடிக்க ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை!

வரி ஏய்ப்பு மற்றும் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பியோடும் கடனாளிகளை (பொருளாதார குற்றவாளிகள்) பிடிக்கவும், அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா ஒன்பது அம்ச தி்ட்டத்தை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக, அர்ஜென்டினாவின் புயினோஸ் ஏரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி -20 நாடுகளின் 13 -வது உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று(நவ.30)முன்வைத்த யோசனைகள்:

வரி ஏய்ப்பு மற்றும்  வங்கி கடன்களை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை  கண்டறிந்து, அவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்கவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் ஜி- 20 நாடுகள் உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். மேலும், அவர்களின் சொத்துகளை முடக்குவது, அவர்களை நாடு கடத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஜி-20 நாடுகளுக்கிடையே வலுவான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

யாரெல்லாம் பொருளாதார குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர் என்பதை பொருளாதார குற்றங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ( எஃப் ஏடிஎஃப்) வரையறுக்க வேண்டும். இவர்கள் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் ஏற்றுகொள்ளத்தக்க பொதுவான வழிமுறைகளையும் எஃப்ஏடிஎஃப்  உருவாக்க வேண்டும்.

பொருளாதார குற்றவாளிகளை திறம்பட கையாளும் நாடுகள், இதுதொடர்பான தங்களது அனுபவங்களை சர்வதேச அளவில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக பொதுவான வழிமுறைகளும்  ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச திட்டத்தை பிரதமர் மோடி மாநாட்டில் முன்வைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP