பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்றும் ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியாகினர்.
 | 

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. முதலாவதாக நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் இந்த அளவு திருத்தி அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்கு பின் பல முறை தொடர்ச்சியான நிலஅதிர்வுகளும் உணரப்பட்டு வருகிறது.  

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கு திசையில் 125 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

அதேபோல, இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பாலி மற்றும்  ஜாவா தீவுகளில் வசித்து வந்த 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு சென்றுள்ளது. அந்த நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கிட்டத்தட்ட அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.  பலி எண்ணிக்கை 2000-த்தை  கடந்த நிலையில் மீட்புப் பணிகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இடிபாடுகளுக்கிடையில் உயிரிழந்தவர்களின் சடங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP