நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு

நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கெர்மடெக் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 | 

நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது.

நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில்சுனாமி அலைகள் இருக்கும் என தொடக்கத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP