இன்று ருவாண்டா செல்கிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.
 | 

இன்று ருவாண்டா செல்கிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.

முதல் நாள் பயணமாக இன்று ருவாண்டா நாட்டுக்கு செல்லும் மோடி, கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர்  ஆவார். மேலும் அங்கு நடைபெற உள்ள  கிரிங்கா  நிகழ்ச்சியில்  பங்கேற்கும் மோடி, அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து, கிகாலி என்ற இடத்தில் 1994-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்.

பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) உகாண்டா சென்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

இவற்றைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

ஆப்பிரிக்க பயணத்தின் போது 3 நாடுகளின் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாட உள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP