மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு!

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் முகமது, தனது பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி, இதுவரை மாலத்தீவுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு!

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் முகமது, தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு  அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். இவர் விரைவில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். நவம்பர் மாதத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இப்ராகிம் முகமது அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனினும் பிரதமர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. 

இந்தியாவின் பிரதமரான மோடி, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் சிறந்த நட்புறவை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை அவர் அண்டை நாடான மாலத்தீவுக்கு செல்லவில்லை. தற்போது அங்கிருந்தே அவருக்கு அழைப்பு வந்துள்ளதால் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்வார் என பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP