பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு சம்பவம்- பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழ்ந்தேரரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்தது. மேலும் படுகாயமடைந்த 77 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சோலோ மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று பிரார்த்தனை செய்வதற்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது தேவாலயம் அருகே முதலில் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த சில நொடிகளில் வாகன நிறுத்துமிடம் அருகே மற்றொரு குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 77 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ‌குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அபு சயாப் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP