இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை!

இஸ்ரேல் ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டில் சிறை தண்டணை பெற்ற சிறுமி விடுதலை செய்யப்பட்டார்.
 | 

இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை!

இஸ்ரேல் ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டில் சிறை தண்டணை பெற்ற சிறுமி விடுதலை செய்யப்பட்டார்.

பாலஸ்தீனத்தில் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அடக்குமுறை மூலம் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து குடியேற்றம் செய்து வருகிறது. இதற்கு எதிராக பாலஸ்தீன மக்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தமிமி என்ற சிறுமியின் வீட்டுக்கு அருகே, குடியேற்றம் செய்ய வந்த இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த அவரது உறவினர்களை தாக்கியது.  இதனைப் பார்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியான அஹித் தமீமி இஸ்ரேல் ராணுவத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட தமிமி, அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அது வைரலாகி சிறுமியின் செயலை பாலஸ்தீன மக்கள் பலரும் பாராட்டினர். அந்நாட்டு அதிபர் முகமது அப்பாஸியும் சிறுமியின் தீரச் செயலை பாராட்டினார்.
 
ஆனால், இஸ்ரேல் ராணுவம் தமிமி மற்றும் அவரது தாயரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் இருவருக்கும் 8 மாத சிறை தண்டனை விதித்து இஸ்ரேல் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது தமிமியும் அவரது தாயும் தண்டனை காலம் முடிவடைந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அப்பகுதி பாலஸ்தீன மக்கள் தங்கள் கொடிகளை அசைத்தும் மலர் கொத்து அளித்தும் விமர்சையாக வரவேற்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP