சிறைகளில் உள்ள 360 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மீனவர்கள் 360 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
 | 

சிறைகளில் உள்ள 360 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மீனவர்கள் 360 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியா -பாகிஸ்தான் இடையே ஒரு பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 360 இந்தியர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. 

அதன்படி, 360 மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் வருகிற ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து ஒவ்வொரு குழுவாக விடுவிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று, முதல் பிரிவாக 100 பேரும், ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 22ம் தேதிகளில் தலா 100 பேரும், ஏப்ரல் 29ம் தேதி 60 பேர் கொண்ட குழுவும் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, இவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP