ஆபாச நடனம் ஆடிய நடன அழகிக்கு ஒரு வருட ஜெயில் !

எகிப்தில் ஆபாச நடனமாடியதற்காக ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 | 

ஆபாச நடனம் ஆடிய நடன அழகிக்கு ஒரு வருட ஜெயில் !

எகிப்தில் ஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கு அரைகுறை ஆடையுடன் நடனமாடியுள்ளார். இந்த காட்சியானது இணையத்தில் வைரலாக பரவியது.

இதையடுத்து நாட்டின் நன்மதிப்பை அந்த பெண் சீர்குலைத்துவிட்டதாக பல்வேறு தரப்பினர் அந்த பெண் மீது புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

அரபு நாடுகளை போல் எகிப்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை சீர்குலைக்கும் வகையில் இந்த பெண் நடந்துகொண்டதால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தொிவித்துள்ளது.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP