சவுதியில் குறுந்தகவல் மூலம் விவகரத்து நோட்டீஸ்

ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விவகரத்து நோட்டீசை குறுந்தகவல் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

சவுதியில் குறுந்தகவல் மூலம் விவகரத்து நோட்டீஸ்

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விவகரத்து நோட்டீசை குறுந்தகவல் மூலம் அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சவுதி அரோபியாவில் ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சீரமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு பெண்கள் உரிமையை நிலை நாட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவாகரத்து பிரச்சினையில் கோர்ட்டில் மனு செய்தவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் மூலம் நோட்டீசு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP