வட கொரியாவின் முக்கிய ஏவுகணை ஏவுதளம் அகற்றம் 

வட கொரியா தனது முக்கிய ஏவுகணைத் தளமான சோகே தளத்தின் ஒரு பகுதியை அழித்துவருவதாக செயற்கைகோள் புகைப்படங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
 | 

வட கொரியாவின் முக்கிய ஏவுகணை ஏவுதளம் அகற்றம் 

வட கொரியா தனது முக்கிய ஏவுகணைத் தளமான சோகே தளத்தின் ஒரு பகுதியை அழித்துவருவதாக செயற்கைகோள் புகைப்படங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

அமெரிக்காவை மையமாக கொண்ட ஆய்வுக் குழு செயற்கைகோள் படங்களை மேற்கோள் காட்டி இதனை தெரிவித்துள்ளது.  முன்னதாக ட்ரம்ப்-கிம் சந்திப்பின்போது வட கொரியா அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் ரீதியில் இந்த செயல் உள்ளதாக கூறப்படுகிறது.

வட கொரியாவின் முக்கிய ஏவுகணை ஏவுதளம் அகற்றம் 

அந்த சந்திப்பின் போது ஒரு சோதனை களத்தை அழித்துவிடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தன்னிடம் தெரிவித்ததாக இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உச்சி மாநாடு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், அதன் முழுமையான விவரம் குறிப்பிடவில்லை.  அப்போது வட கொரியா தனது அணுஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளும் நிலையில் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்க பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இருத் தலைவர்களும் தங்களது நாட்டின் சார்பில் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்த விவரங்களின் விவரம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. 

இதுவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா 6 அணுஆயுத சோதனைகளை நடத்தியது. இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு சோதனையை அந்நாடு நடத்தியது.  கண்டம் விட்டு கண்டம் பாயும்க ஏவுகணைகளை தயாரிக்கவும், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் தற்போது அகற்றப்பட்டிருக்கும் சோகே ஏவுதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP