வடகொரியாவின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் !

வடகொரியா உருவான 70வது ஆண்டு தினத்தையொட்டி அந்நாட்டில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 70வது ஆண்டு விழா தலைநகர் பிராயாங்கங்-இல் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் சீனா, ரஷியா, கியூபா நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 | 

வடகொரியாவின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் !

வடகொரியா உருவான 70வது ஆண்டு தினத்தையொட்டி அந்நாட்டில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து 1948ம் ஆண்டு விடுதலை பெற்றது கொரியா. இதை தொடர்ந்து வடகொரியா, தென் கொரியா என இரண்டு நாடுகளாக பிரிந்தன. 

வடகொரியாவில் கிம் இல் சுங் தலைமையில் புதிய ஆட்சி தோன்றிய ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் 70வது ஆண்டு விழா தலைநகர் பிராயாங்கங்-இல் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் சீனா, ரஷியா, கியூபா நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் !

வடகொரியாவின் படை பலத்தை காட்டும் வகையில் ராணுவ அணிவகுப்பு அமைக்கப்பட்டது. வான் சாகசங்களும்வான வேடிக்கைகளும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தது. 2 மணிநேரம் நடந்த அணிவகுப்பை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமைவது வழக்கம். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிப்பது குறிப்பிடத்தக்கது. 

வடகொரியாவின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் !

ஆனால் இம்முறை கடந்த ஆண்டு அணி வகுப்பில் இடம்பெற்ற கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்புடான கிம் ஜாங் உன் சந்திப்பு காரணமாக நவீன ஏவுகணைகள் இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.  

இந்த கொண்டாட்டங்களின் பகுதியாக கலைநிகழ்ச்சிகள் அடுத்த ஒரு மாதம் நடைபெறும் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 7 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக வடகொரியா தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP