ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிடும் வடகொரிய நாடாளுமன்ற தேர்தல்!

வடகொரியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில், இந்த தேர்தலில் வழக்கம்போல ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
 | 

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில், அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும். இதற்கு முன் மார்ச் 2014 தேர்தல் நடைபெற்றிருந்தது. ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

இந்தத் தேர்தலில், வடகொரியாவின் ஆளும், உழைப்பாளிகள் கட்சியின் சார்பாக ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உழைப்பாளிகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "இந்த தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீண்டும் நிலை நிறுத்தப்படும்" என்று தெரிவித்திருந்தது. கடந்த தேர்தலில் 99.97% வாக்கு பதிவாகி இருந்ததாக வடகொரியா தெரிவித்திருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவு வெளியாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP