எறும்பு கூட நுழைய முடியாத பாதுகாப்பு: வட கொரிய அதிபரின் ராணுவப் படை (வீடியோ)

உலகின் வேறு எந்தத் தலைவரும் இதுவரை பெற்றிடாத அளவுக்கு தலை சிறந்த ராணுவக் குழுவே வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றனர்.
 | 

எறும்பு கூட நுழைய முடியாத பாதுகாப்பு: வட கொரிய அதிபரின் ராணுவப் படை (வீடியோ)

எறும்பு கூட நுழைய முடியாத பாதுகாப்பு: வட கொரிய அதிபரின் ராணுவப் படை (வீடியோ)உலகின் வேறு எந்தத் தலைவரும் இதுவரை பெற்றிடாத அளவுக்கு தலை சிறந்த ராணுவக் குழுவே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றனர். 

கொரிய தீபகற்பத்து நாடான வட கொரியா, அமெரிக்கா, சீனா என வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. சர்வதேச நாடுகள் அதன் ராணுவத்தைக் கண்டு மிரண்டிருப்பதற்கு அதன் ராணுவ கட்டமைப்பே முதல் காரணம்.  அதன் அணுசக்தி திறன் அனைத்தும் ராணுவத்துக்கு அப்பாற்பட்டதே.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரியா அதிபரை சந்தித்த போது அவரை தொடர்ந்த பாதுகாப்பு படையை தான் இன்று உலக நாடுகளில் முக்கிய பேச்சாக உள்ளது. வியக்கவைக்கும் அரணாக திகழ்ந்த அந்த அதிகாரிகளின் அசைக்கமுடியாத பாதுகாப்பு குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக உள்ளது. 


ஆறு அடுக்கு பாதுகாப்பு கொண்ட அந்தப் படை ஒரு சிறிய ராணுவம் என்று தான் வர்ணிக்க வேண்டும்.  இவர்கள் உலகளவில் தலைசிறந்த வீரர்கள், கடுமையான தேர்விற்கு பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சண்டை பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல் என பல கலைகள் கற்றுத் தேர்ந்த வீரர்களை தேடி தேர்ந்தெடுத்து அதிபருக்கு 6 அடுக்கு பாதுகாப்பு வீரர்கள் போடப்படுகின்றனர்.  

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் என எந்த நாட்டுத் தலைவருக்கும் இது போன்ற வீரியமான பாதுகாப்பு கிடையாது. 

கிம் ஜாங் உன்னுக்கு பூச்சுகள் என்றாலே ஒவ்வாமை,  நேற்றைய சந்திப்பின்போது, தென் கொரிய அதிபருடன் ஆலோசனை நடத்தி கையெழுத்திட்ட மேசைக்கூட அத்தனை முறை சோதனைகளுக்கு உட்படுத்தி பூச்சுக்கள் அண்ட முடியாத அளவுக்கு வைக்கப்பட்டது.

எறும்பு கூட நுழைய முடியாத பாதுகாப்பு: வட கொரிய அதிபரின் ராணுவப் படை (வீடியோ)

அதுபோலவே, எறும்பு கூட சீண்ட முடியாத பாதுகாப்பு கொண்டவர் கிம் ஜாங் உன் என்றால், அது மிகைப்படுத்தலே இல்லை. வெறும் கூற்றாக அல்ல. அவரை எறும்பும் கடந்திடாத அளவுக்கு நுட்பான பாதுகாப்பு அவர் கொண்டிருப்பது உண்மை தான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP