தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா

தென்கொரியாவில் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அதன் பகை நாடான வடகொரியா கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளது.
 | 

தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா


தென்கொரியாவில் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதன் பகை நாடான வடகொரியா கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளது. 

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை  சோதனைகளை நடத்தி வருகிறது. முக்கியமாக தென் கொரியாவுக்கு எதிராக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி வருவதால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். 

இது ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் தென்கொரியாவில் 2018ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடத்துவதற்கான வேலைகள் ஆயத்தமாகியுள்ளன. அதன்படி,பிப்ரவரி 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை போட்டியானது நடைபெற இருக்கிறது. 

தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பகை நாடான வடகொரியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் மற்ற நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், வருகிற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கண்டிப்பாக வடகொரியா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP