காதலுக்கு கண் இல்லை- பாதுகாப்பு அதிகாரியை மணந்த தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். சுஜிதா திட்ஜாய் என்ற அந்த பெண் உடனடியாக தாய்லாந்து அரசியாக அறிவிக்கப்பட்டார்.
 | 

தாய்லாந்து நாட்டின் 10வது ராமா என்ற அழைக்கப்படும் 66 வயதான வஜிரா லோங்கார்ன் கடந்த 2016ம் ஆண்டில் தனது தந்தையின் மறைவுக்கு பின் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.

வருகிற 4ம் தேதி வஜிரா லோங்கார்ன் அதிகாரப்பூர்வமாக அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அவர் தனது பெண் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த பெண் உடனடியாக தாய்லாந்து நாட்டின் அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றி சுஜிதா திட்ஜாய் பின்னர் மன்னரின் பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றினார்.

அப்போது மன்னருக்கும் சுஜிதா திட்ஜாய்க்கும் காதல் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னர் வஜிரா லோங்கார்ன் 3 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு 7 குழந்தைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP