நைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி

நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
 | 

நைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி

நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நைஜிரியாவில் உள்ள அஹீம்பே என்ற கிராமத்தின் வழியாக பெட்ரோல் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதிலிருந்த பெட்ரோல் கீழே வழியத் தொடங்கியது.

இதையடுத்து கிராம மக்கள் பெட்ரோலை சேகரிக்க முண்டியடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் தீப்பிடித்து டேங்கர் வெடித்துச் சிதறியது.

இதில் அங்கிருந்த 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP