நைஜீரியா- மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்களில் 30 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
 | 

நைஜீரியா- மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவில் உள்ள கொண்டுகா என்ற பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் ரசிகர்கள் தொலைகாட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 போகோ ஹராம் தீவிரவாதிகள் தாங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த ரசிகர்களில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP