நைஜீரியா: 3 பேர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 18 பேர் பலி

நைஜீரியா: 3 பேர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 18 பேர் பலி
 | 

நைஜீரியா: 3 பேர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 18 பேர்  பலி


நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுறி என்னும் நகரத்தில் மூன்று பேர் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர். மீன் சந்தையில் சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில், 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் பெண்களாக தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நைஜீரியாவில் தொடர்ந்து போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து பயங்கரமான தாக்குதலை நிகழ்த்தி வருவதால், இந்த தாக்குதலும் அவர்கள் தான் நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

தீவிரவாத அமைப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களை தான் அதிகம் தாக்குதலுக்கு உபயோகிக்கின்றனர். மைதுகுறி, தீவிரவாத குழுவின் பிறப்பிடமாக இருப்பதால், இந்த இடம் அடிக்கடி குறிவைக்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP