நோய் தாக்கம் காரணமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து முடிவு!

நியூசிலாந்து நாட்டில் நோய் தாக்கம் காரணமாக 1,50,000 பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
 | 

நோய் தாக்கம் காரணமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து முடிவு!

நோய் தாக்கம் காரணமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து முடிவு!

நியூசிலாந்து நாட்டில் நோய் தாக்கம் காரணமாக 1,50,000 பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பால் உற்பத்தி அதிகமாக காணப்படும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இங்கு மொத்தமாக 1 கோடி பசுக்கள் உள்ளன. இது அங்குள்ள மக்கள் தொகையினை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே இங்கு பால் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

சமீபத்தில், பசுக்கள் 'மைக்கோபிளாஸ்மா போவிஸ்'(Mycoplasma bovis) என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டது, இந்த பாக்டீரியா தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் உடல்நலக்குறைவின்றி சிறிது காலத்தின் இறந்து விடுகின்றன. பசுக்களில் இந்த நோய் தாக்காமல், பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட. இதையடுத்து தற்போது நோய் மற்ற பசுக்களுக்கும் பரவாமல் இருக்க வேண்டுமானால் நோய் தாக்கப்பட்ட பசுக்களை கொல்வது தான் தீர்வாக இருக்கும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 26,000 பசுக்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1,28,000 பசுக்களை கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். வேறுவழியில்லாமல் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தரப்பில் அவர்களுக்கு விளக்கம் தெரிவிக்கப்பட்டு  வருகிறது. 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றை கொன்று சாப்பிடுவதற்கும் உபயோகிக்கலாம். நோய் தாக்கப்பட்ட பசுக்களின் இறைச்சியை சாப்பிட்டால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதையும் அரசு உறுதி செய்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP