மோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்

மோமோ, கிகி சேலஞ்ச் என அவ்வப்போது கிளம்பும் சவால்கள் இணையதள பிரியர்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இவற்றைத் தொடர்ந்து தலைகுப்புற விழுந்தவாறு படுத்து படமெடுத்து பதிவேற்றம் செய்யும் சவால் வைரலாக பரவி வருகிறது.
 | 

மோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்

நீலத் திமிங்கலம், மோமோ, கிகி சேலஞ்ச் என இணையத்தில் அவ்வப்போது கிளம்பும் சவால்கள் சமூக வலைதள பிரியர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.  இவற்றைத் தொடர்ந்து  தலைகுப்புற விழுந்தவாறு படுத்து அதனை படமெடுத்து பதிவேற்றம் செய்யும் வினோத சவால் வைரலாக பரவி வருகிறது. 

"ஃபாலிங் ஸ்டார்' (கீழே விழுதல்) என்ற சவால் உலகம் முழுவதும் பரவி வைரலாகி வருகிறது. முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் 'ஃபாலிங் ஸ்டார் சேலஞ்ச்' அறிமுகமானது. அதாவது பணக்காரர்கள் தங்களின் செல்வ மதிப்பை காட்டும் வகையில் சொந்த விமானத்தின் படிக்கட்டு, சொகுசு கார் கதவு, சொகுசு படகின் படிக்கட்டு, ஆடம்பர கேளிக்கை விடுதி வாசலில் தலைகுப்புற விழுந்து கிடப்பதுபோல புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து இந்தச் செயலை சவாலாக ஏற்று பணக்காரர்கள் பலரும் வெவ்வேறு இடங்களில் தரையில் விழுந்து கிடக்கும் படங்களை வகை வகையாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். ஆனால் தற்போது ஆசியாவில் பரவியுள்ள இந்த சேலஞ்ச் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படுகிறது. 

இது போல வளர்ப்பு பிராணிகளையும் தலைகுப்புற படுக்கச் செய்து வலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2 பெண்கள், இந்த சவாலுக்காக நடைபாதையில் தலைகுப்புற படுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை காண அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இரு பெண்களையும் போலீசார் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

இதே போல, மற்றொரு சாலையில் காரை நிறுத்தி தரையில் விழுந்து கிடப்பதுபோல தம்பதியினர் படம் எடுத்த பொது போலீசிடம் சிக்கினர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP