சிங்கப்பூர் பூங்காவில் ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர்!

சிங்கப்பூரில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பூங்காவில் ஒருவகை ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது.
 | 

சிங்கப்பூர் பூங்காவில் ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர்!

சிங்கப்பூரில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பூங்காவில் ஒருவகை ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது.

பிரதமர் மோடி இந்த வாரம் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை நேற்று (சனிக்கிழமை) நிறைவு செய்தார். தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த பூங்காவில் உள்ள ஒருவகை ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது. பூங்கா சென்ற மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் ஆர்கிட் மலருக்கு பிரதமரின் பெயர் சூட்டப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிங்கப்பூர் பூங்காவில் ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர்!

அப்போது அவர் சிங்கப்பூரில் உள்ள பழமைவாய்ந்த மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். மேலும், இந்திய முஸ்லிம்களால் கட்டப்பட்ட மசூதி, புத்த மடாலயத்துக்கும் அவர் சென்றார். சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தில் இந்திய கடற்படையின் சத்புரா போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது. அந்த கடற்படைத் தளத்துக்கு சென்ற பிரதமர் மோடி இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேசினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP